குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
ராணுவ தினமான நாளை லோங்கேவாலாவில் காதி தேசியக் கொடி காட்சிப்படுத்தப்படும்.
Posted On:
14 JAN 2022 4:59PM by PIB Chennai
காதி துணியால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி, ஜெய்சால்மரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சனிக்கிழமையன்று "ராணுவ தினத்தை" கொண்டாடும் வகையில் பொதுப் பார்வைக்கு வைக்கப்படும்.
1971-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரின் முக்கிய களமாக இருந்த லோங்கேவாலாவில் தேசியக் கொடி காட்சிப்படுத்தப்படும்.
அக்டோபர் 2, 2021 அன்று லேவில் இந்த தேசியக் கொடி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 5-வது பொதுக் காட்சிப்படுத்தலாக இது இருக்கும். அக்டோபர் 8, 2021 அன்று விமானப்படை தினத்தன்று ஹிண்டன் விமானத் தளத்திலும், இந்தியாவில் 100 கோடி கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 21-ம் தேதி செங்கோட்டையிலும் இது காட்சிப்படுத்தப்பட்டது.
டிசம்பர் 4, 2021 அன்று கடற்படை தினத்தை கொண்டாடுவதற்காக மும்பையில் இந்தியாவின் நுழைவுவாயில் அருகே உள்ள கடற்படை தளத்தில் இந்த தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது.
இந்தியத்தன்மையின் கூட்டு உணர்வையும் காதியின் பாரம்பரிய கைவினைக் கலையையும் குறிக்கும் நினைவுச்சின்னமாக அமைந்துள்ள இந்த தேசியக் கொடி, சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் 'விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை' குறிக்கும் விதமாக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டது.
இந்த தேசியக் கொடி 225 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் (தோராயமாக) 1400 கிலோ எடை கொண்டது ஆகும். இந்தக் கொடியைத் தயாரிக்க 70 காதி கைவினைஞர்களுக்கு 49 நாட்கள் ஆனது. இதன் மூலம் காதி கைவினைஞர்கள் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு கிட்டத்தட்ட 3500 மணி நேர கூடுதல் வேலை கிடைத்துள்ளது.
33,750 சதுர அடி பரப்பளவைக் கொண்ட கொடியை உருவாக்க 4500 மீட்டர் கையால் சுழற்றப்பட்ட, கையால் நெய்யப்பட்ட காதி பருத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. கொடியில் உள்ள அசோக சக்கரம் 30 அடி விட்டம் கொண்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789943
*************
(Release ID: 1789976)
Visitor Counter : 209