அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அரசுத்துறைக்கு வெளியே உள்ள தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பு மிக்க புதிய ஸ்டார்ட் அப் வழிமுறைகள் குறித்து பெரும் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.

Posted On: 13 JAN 2022 4:46PM by PIB Chennai

அரசுத்துறைக்கு வெளியே உள்ள தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பு மிக்க புதிய ஸ்டார்ட் அப் வழிமுறைகள் குறித்து பெரும் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ( தனிப்பொறுப்பு) ; புவி அறிவியல் ( தனிப்பொறுப்பு)பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார். வாழ்வாதார இணைப்புகளுடன் கூடிய நீடித்த ஸ்டார்ட் அப்கள், புதிய இந்தியாவின் முகத்தை மாற்றக்கூடிய அளவுக்கு புரட்சிகரமான ஆற்றல் கொண்டவை என்று அவர் தெரிவித்தார்.

தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி  நிறுவனத்தின் முதலாவது நிறுவன தினத்தையொட்டி உரையாற்றிய டாக்டர். ஜிதேந்திர சிங், புத்தாக்கத்துடன் ஸ்டார்ட் அப்கள் வரும்போது, இந்தியா பொற்காலத்தில் நுழைகிறது என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியதை சுட்டிக்காட்டினார்.

அறிவு சார்ந்த பொருளாதாரத்தை கட்டமைக்கும் நமது கொள்கை முடிவுகள் நாட்டில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியிருப்பதாக டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார். சிஎஸ்ஐஆர், கிராமப்புறங்களிலும் தொழில் தொடங்கும் ஆர்வத்தை ஏற்படுத்த உதவி இருப்பதாக அவர் பாராட்டினார். உலகில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, அதிக யுனிகார்ன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது என்றும், முதலாவது இடத்தை இந்தியா பிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம்தேதி பிரதமர் டிஜிடல் சுகாதார இயக்கத்தை அறிவித்ததை சுட்டிக்காட்டிய டாக்டர். ஜிதேந்திர சிங், முழுமையான சுகாதார நடைமுறைகளை உருவாக்க கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

வலுவான அடித்தளத்துடன் தொடங்கப்பட்டுள்ள தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி  நிறுவனத்தின் புதிய இணையதளத்தையும் டாக்டர். ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்தி குறிப்பை காணவும்

****(Release ID: 1789710) Visitor Counter : 115


Read this release in: Urdu , English , Hindi , Kannada