கனரகத் தொழில்கள் அமைச்சகம்

மத்தியப் பிரதேசத்தில் இருந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற அதிகம் அறியப்படாத நாயகர்கள் குறித்த கண்காட்சியை திரு. அருண் கோயல் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

Posted On: 13 JAN 2022 3:18PM by PIB Chennai

மத்திய கனரக தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) போபால், 2022 ஜனவரி 10 முதல் 16 வரை விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடுகிறது.

 

இதன் ஒரு பகுதியாக, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற அதிகம் அறியப்படாத நாயகர்கள் குறித்த கண்காட்சி பெல் போபால் வளாகத்திலும், சிந்தனை உருவாக்க சவால் சன்ரச்னா இணையதளத்திலும் நடைபெறுகிறது.

 

மத்திய கனரக தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு. அருண் கோயல் இதன் தொடக்க விழாவில் தலைமை விருந்தினராக புதுதில்லியில் இருந்து காணொலி மூலம் கலந்து கொண்டார். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். நளின் சிங்கால், செயல் இயக்குநர்கள், பொது மேலாளர்கள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள பெல் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் காணொலி மூலம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பொது மேலாளரும் பெல் போபாலின் தலைவருமான திரு. சுசில்குமார் பவேஜா துவக்க உரையை வழங்கினார். இதைத்தொடர்ந்து பெல் கீதம் இசைக்கப்பட்டது. மத்திய கனரக தொழில்கள் அமைச்சர் டாக்டர். மகேந்திரநாத் பாண்டே மற்றும் இணை அமைச்சரின் வாழ்த்துச்செய்திகள் வாசிக்கப்பட்டன.

 

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் விடுதலையின் அமிர்த பெருவிழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789638

****



(Release ID: 1789667) Visitor Counter : 164


Read this release in: English , Urdu , Hindi , Telugu