அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தொடுதல் மற்றும் ஒலி சென்சார் பயன்பாட்டுக்கான சிறப்பு எலக்ட்ரோ நானோ துகள்கள் உருவாக்கம்
प्रविष्टि तिथि:
12 JAN 2022 5:04PM by PIB Chennai
இதுவரையுள்ள மின்சார புலத்தில் மிக குறைந்த அளவில், பாலிவினைல்டின் புளூரைடு (PVDF) நானோ துகள்களின் டெல்டா கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். இது வழக்கமாக உள்ள மின்புலத்தை விட 103 மடங்கு குறைந்தது. பயன்பாட்டு அடிப்படையிலான வர்த்தக தொழில்நுட்பங்களுக்கு, இந்த கண்டுபிடிப்பு மிகவும் வசதியானது. இந்த ஆய்வு ‘அப்ளைடு பிசிக்கல் லெட்டர்ஸ்’ என்ற இதழில் சமீபத்தில் வெளியானது.
இந்திய புதிய முறை பாலிவினைல்டின் புளூரைடு-ல் PVDF பைசோஎலக்ட்ரிக் டெல்டா கட்டத்தைத் தூண்டுவதற்கான ஒரு சிறந்த வழியை வழங்குவது மட்டுமல்லாமல், தற்போதுவரையுள்ள குறைந்த மின் புலத்தின் கீழ் நானோ கட்டமைப்புகளின் உருவ அமைப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
எனவே, இந்த கண்டுபிடிப்பு, இந்தத் துறையில் நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தும் மற்றும் அதிக மின்புலத்தின் தேவை காரணமாக முன்பு தடைபட்டிருந்த டெல்டா கட்டத்தின் பயன்பாட்டை மேலும் ஆராய அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789384
************
(रिलीज़ आईडी: 1789499)
आगंतुक पटल : 232