பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பீரங்கி எதிர்ப்பு ஏவகணையின் இறுதிசோதனை வெற்றி

Posted On: 11 JAN 2022 6:27PM by PIB Chennai

கையல் எடுத்துச் செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையின் இறுதி சோதனையை ராணுவ ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டு கழகம் (டிஆர்டிஓ) இன்று வெற்றிகரமாக மேற்கொண்டது.

எனப்படும் கையல் எடுத்துச் செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை (MPATGM), டிஆர்டிஓ உருவாக்கியது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை குறைந்த எடை கொண்டது. கையோல் தூக்கிச் செல்லப்படும் லாஞ்சரில் இருந்து இந்த ஏவுகணையை ஏவ முடியும். இந்த ஏவுகணை எதிரி நாட்டு பீரங்கி வானகங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தது. இதன் இறுதி கட்ட பரிசோதனை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 

தற்போதைய சோதனையில், குறைந்த தூரத்தில் உள்ள இலக்கை  இந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.  ஏவுகணையின் அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக இருந்தது.  இந்த ஏவுகணையில், சிறிய ரக அகச்சிவப்பு கதிர் கருவி, நவீன ஏவியானிக்ஸ், வழிகாட்டுதல் கருவிகள் உள்ளன. இதற்கு முன் நடத்தப்பட்ட சோதனையில், தொலை தூர இலக்குககளையும், இந்த ரக ஏவுகணை துல்லியமாக தாக்கி அளித்தது. 

பீரங்கி எதிர்பு ஏவுகணை சோதனையின் வெற்றிக்காக டிஆர்டிஓ-வுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பம் அடிப்படையிலான ராணுவ தளவாடங்களை உருவாக்கும் தற்சார்பு இந்தியா திட்டத்தில் இது முக்கியமான நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஏவுகணையின் வெற்றிகர சோதனைக்காக, இதன் தயாரிப்பு குழுவில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789153

***********


(Release ID: 1789262) Visitor Counter : 256


Read this release in: English , Urdu , Hindi , Marathi