தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

2021 செப்டம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் ஒன்பது குறிப்பிட்ட துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக இருந்தது

Posted On: 10 JAN 2022 5:15PM by PIB Chennai

நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்பு குறித்த அகில இந்திய காலாண்டு ஆய்வின் ஒரு பகுதியாக இரண்டாம் காலாண்டுக்கான காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் இன்று வெளியிட்டார்.

விவசாயம் சாராத துறைகளில் உள்ள மொத்த வேலைவாய்ப்பில் பெரும் பங்காற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 துறைகளில் முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைசாரா வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கைகள் தொடர்ந்து வழங்குகின்றன.

உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம்/பிபிஓ மற்றும் நிதி சேவைகள் ஆகியவை இந்த ஒன்பது துறைகள் ஆகும்.

ஆய்வு முடிவுகளை வெளியிட்ட அமைச்சர், வேலைவாய்ப்பு நிலவரம் முன்னேறி வருவதாகவும் ஒட்டுமொத்த பெண் தொழிலாளர்களின் விகிதம் 32.1 ஆக இருப்பதாகவும். காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையின் முதல் சுற்றில் இது 29.3% ஆக இருந்ததாகவும் கூறினார்.

2021 செப்டம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் ஒன்பது குறிப்பிட்ட துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக இருந்தது. உற்பத்தி துறை முப்பத்தி ஒன்பது சதவீதத்திற்கு பங்களித்த நிலையில் கல்வித்துறை 22 சதவீதத்திற்கும், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம்/பிபிஓ துறைகள் சுமார் 10 சதவீதத்திற்கும் பங்காற்றியுள்ளன.

வேலைவாய்ப்புகளின் தேவை மற்றும் விநியோக நிலவரம் குறித்த ஆய்வுகள் நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு தரவுகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப உதவும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788945

***************

 



(Release ID: 1788977) Visitor Counter : 185


Read this release in: English , Urdu , Hindi