அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் முன்னேறிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரெய்லி வரைபடங்களை பயன்படுத்த முடியும்
Posted On:
10 JAN 2022 3:56PM by PIB Chennai
நாடு முழுவதிலும் உள்ள பார்வை குறைபாடுள்ள மாணவர்கள், டிஜிட்டல் எம்போஸிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பிரெய்லி வரைபடங்களுக்கான அணுகலைப் பெறுவார்கள், எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் இவை இருக்கும்.
டிஜிட்டல் எம்போசிங் தொழில்நுட்பம் என்பது அச்சிடும் தட்டுகள், அச்சுகள், ரசாயனங்கள் மற்றும் கரைப்பான்கள் ஆகியவற்றின் தேவையை நீக்குவதோடு, மாசுபடுத்தும் கழிவுகளை வெளியிடுவதில்லை மற்றும் ஒட்டுமொத்த மின்சார பயன்பாட்டைக் குறைக்கிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இணைக்கப்பட்ட அலுவலகமாகச் செயல்படும் தேசிய அட்லஸ் & தீமேட்டிக் மேப்பிங் ஆர்கனைசேஷன் (நாட்மோ) மூலம் இந்தப் புதுமையான தொழில்நுட்பம் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரைபடங்களை வேகமாக உருவாக்க முடிவதோடு, பல வருடங்கள் பயன்படுத்தக்கூடிய பிரெய்லி வரைபடங்களையும் உருவாக்க முடியும்.
நாட்மோ தனது பயணத்தை 1997-ம் ஆண்டில் தொடங்கியது, பார்வையற்றோருக்கான பிரெய்லி அட்லஸ் (இந்தியா) பதிப்பு, 2017 பார்வையற்றோர் சமூகத்தின் பெரும் வரவேற்பைப் பெற்றது. 10 பிப்ரவரி 2017 அன்று புது தில்லியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வெளியீட்டிற்காக, "மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தலையீடு" என்ற தேசிய விருதை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்மோவுக்கு வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788927
*************
(Release ID: 1788965)
Visitor Counter : 223