ரெயில்வே அமைச்சகம்
2021: உள்கட்டமைப்பை வலுப்படுத்தியது மத்திய ரயில்வே.
Posted On:
08 JAN 2022 2:32PM by PIB Chennai
உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், பயணிகளின் வசதிக்காகவும் மத்திய ரயில்வே பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தவும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பயணிகளின் வசதிகளை அதிகரிக்கவும் இந்த ஆண்டில் கவனம் செலுத்தப்பட்டது.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட புறநகர் மற்றும் நீண்ட தூர ரயில் சேவைகள், மும்பை மண்டலத்தில் தற்போது படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டு கொவிட் தொற்றுக்கு முந்தைய நிலையில் இயங்கி கொண்டிருக்கின்றன.
சரக்கு போக்குவரத்து செயல்பாடு
* மத்திய ரயில்வே, முதல் முறையாக ஒரே மாதத்தில் 7 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்தது. இதற்கு முன் 2021 மார்ச் மாதம் படைக்கப்பட்ட 6.96 மில்லியன் டன்கள் என்ற சாதனையை கடந்தது .
* கடந்த ஆண்டில் கிசான் ரயில்கள் 770 பயணங்களை மேற்கொண்டன. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 900 பயணங்களை கிசான் ரயில்கள் முடித்துள்ளன.
ரயில் சேவைகள்
* துறைமுக வழித்தடத்தில் 12 ஏசி மின்சார ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. * சலிஸ்காவ்ன் - துலே வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைகள்
* 2021ம் ஆண்டில் 6 ரயில்களின் 12 பெட்டிகள், எல்எச்பி (ஜெர்மன் நிறுவனம்) ரயில் பெட்டிகளாக மாற்றப்பட்டன.
* பல ரயில்களில் 166 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன.
* கோடை விடுமுறை மற்றும் விழாக்கால விடுமுறை நாட்களில் 1742 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
* ரயில் பயணிகளுக்கு பொது பாஸ் வழங்க யுடிஎஸ் கைப்பேசி செயலி மாநில அரசின் இணையதளத்துடன் இணைக்கப்பட்டது.
* 13 நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.
* மத்திய ரயில்வேயில் 319 நடை மேம்பாலங்கள் உள்ளன.
* 125 எஸ்கலேட்டர்கள் உள்ளன.
* மும்பை மண்டலத்தில் 5 இரட்டை எஸ்கலேட்டர்கள் உள்ளன.
* 86 லிஃ.ப்ட்கள் உள்ளன.
* 379 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி உள்ளது.
* இதுவரை மும்பை மண்டலத்தில் 3,450 ரயில் நிலையங்கள் உட்பட 4687 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
* 37 புறநகர் ரயில்களில் 200 பெண்கள் பெட்டியில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
* பெண் பயணிகளுக்கான ஸ்மார்ட் சகேலி செயலி தொடங்கப்பட்டுள்ளது.
* நெடுந்தூரம் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக ‘மேரி சகேலி’ செயலி உள்ளது
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம் :
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788548
*****************
(Release ID: 1788599)
Visitor Counter : 252