ரெயில்வே அமைச்சகம்
2021: உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை கண்டது தெற்கு மத்திய ரயில்வே
Posted On:
07 JAN 2022 1:28PM by PIB Chennai
தெற்கு மத்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மொத்தம் 227.5 கிமீ பாதைகள் 2021-ம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தடையற்ற ரயில் இயக்க வசதியை வழங்குவதற்காக, இம்
மண்டலத்தில் 657 கிமீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வருடமாக 2021-ம் ஆண்டு தெற்கு மத்திய ரயில்வேக்கு அமைந்தது.
தங்க நாற்கர பாதை, தங்க டயாக்னல் பாதை மற்றும் தெற்கு மத்திய ரயில்வேயில் அதிக போக்குவரத்து கொண்ட பாதைகளில் வேகம் ஒரு மணிக்கு 130 கி.மீ ஆக மேம்படுத்தப்பட்டது.
ரேணிகுண்டாவில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு கிட்டத்தட்ட 7.77 கோடி லிட்டர் பாலை தூத் துரந்தோ கொண்டு சென்றது.
தெற்கு மத்திய ரயில்வேயை சேர்ந்த 546 கிசான் ரெயில்கள் 1.77 லட்சம் டன்கள் விவசாய உற்பத்தியை கொண்டு சென்றன.
தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள 63 நிலையங்கள் ஐஎஸ்ஓ 14001 தரச் சான்றிதழைப் பெற்றன,
இதுவரை இல்லாத அளவில் ரூ. 207.9 கோடி பார்சல் வருவாயை 2021-ம் ஆண்டில் தெற்கு மத்திய ரயில்வே ஈட்டியது. முந்தைய ஆண்டின் (2020) பார்சல் வருவாயை விட இது கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகம்.
மொத்தம் 41,386 ரயில்வே ஊழியர்களுக்கு (சுகாதாரப் பணியாளர்கள் உட்பட) இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, 69,183 தொழிலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788273
************
(Release ID: 1788435)
Visitor Counter : 232