பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் காசநோயை ஒழிக்க இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் முன்முயற்சி உதவவுள்ளது
Posted On:
07 JAN 2022 5:43PM by PIB Chennai
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்கள் மற்றும் பஞ்சாபில் 23 மாவட்டங்களில் நகர ஒருங்கிணைப்புக் குழுக்கள், மாவட்ட சுகாதார சங்கங்கள், தொழில்நுட்ப ஆதரவுக் குழுக்கள் போன்றவற்றின் மூலம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் உ.பி. மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் மக்களை பரிசோதனை செய்வதே திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும். நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் நெறிமுறையின்படி சிகிச்சை தொடரும்.
இந்தியாவின் கடுமையான சுகாதார சவால்களில் ஒன்றாக காசநோய் தொடர்கிறது. 2030-ம் ஆண்டின் நிலையான வளர்ச்சி இலக்கை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, அதாவது 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அறைகூவலை 2018-ம் ஆண்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்தார்.
காசநோய் திட்டத்திற்காக ஆண்டு தோறும் அதிக நிதியை இந்திய அரசு வழங்குகிறது. இருந்த போதிலும், அரசின் முயற்சிகளுக்கு தேவையான ஆதரவை அளிப்பது அவசியம். நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் தொற்று சங்கிலியை உடைக்கலாம் என்பதால் மக்களை அதிகளவில் பரிசோதனை செய்ய வேண்டும்.
பிரதமரின் தொலைநோக்குப் லட்சியத்தை அடைய, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து, காசநோய் இல்லா இந்தியாவுக்கான மக்கள் இயக்கத்தில் இணைகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788385
******************
(Release ID: 1788385)
(Release ID: 1788424)
Visitor Counter : 214