நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி உற்பத்தியை மேலும் அதிகரிக்க நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சத்தீஷ்கர் முதலமைச்சரை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 07 JAN 2022 4:32PM by PIB Chennai

சத்தீஷ்கரில் உள்ள தென்கிழக்கு நிலக்கரி படுகை நிறுவனத்தின் பல்வேறு நிலம் தொடர்பான  பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண தாம் கோரியிருப்பதாக மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இத்தகைய பிரச்சனைகள்  விரைவில் தீர்க்கப்பட்டால் சத்தீஷ்கர் மாநிலத்தில் நிலக்கரி உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் என்று சத்தீஷ்கர் முதலமைச்சர் திரு பூபேஷ் பாகெலுடன் இன்று நடத்திய இணையவழி சந்திப்பில் மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார். கனிமத்துறையில் அண்மையில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களின்படி, தாதுப்படிமங்களின் ஏலத்தை விரிவுப்படுத்துமாறும் முதலமைச்சரிடம் திரு ஜோஷி கேட்டுக்கொண்டார். 

பின்னர் நிலக்கரி மற்றும் இந்திய நிலக்கரி நிறுவன மூத்த அதிகாரிகளுடன் தனியாக நடத்திய கூட்டத்தில் அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.  பாதுகாப்புடன் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

------


(रिलीज़ आईडी: 1788398) आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu