ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித்துறைக்கு ஜிஎஸ்டி வரி அதிகரிப்பை தள்ளி வைத்த பிரதமருக்கு திரு பியூஷ் கோயல் நன்றி
இடுகை இடப்பட்ட நாள்:
04 JAN 2022 6:55PM by PIB Chennai
இந்தியாவின் வளர்ச்சியில் அரசுக்கும், தொழில்துறைக்கும் பங்குள்ளதாக மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். இந்திய ஜவுளித் தொழிலதிபர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய அவர், நமது இலக்குகளை அடைய முயற்சிகளை ஒன்றிணைத்து அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஜவுளித் தொழில் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை விரைவாக அடைய ஜவுளித் தொழிலில் சம்பந்தப்பட்டவர்கள் பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரியை ஐந்து சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தும் முடிவை தள்ளி வைத்துள்ளதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச்சருக்கும் திரு கோயல் நன்றி தெரிவித்துள்ளார். ஜவுளித் தொழிலுக்கு இது புத்தாண்டு பரிசு என அவர் தெரிவித்துள்ளார். சவாலான இந்தக் காலக்கட்டத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும் என்றும் அமைச்சகத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பிரதமரின் தலைமையின் கீழ், ஜவுளித்துறை புதிய ஊக்கம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், நமது கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரை தற்சார்பு இந்தியாவை எட்டும் முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787473
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1787490)
வருகையாளர் எண்ணிக்கை : 326