பாதுகாப்பு அமைச்சகம்

2022 என்சிசி குடியரசு தின முகாமை என்சிசி தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜென்ரல் குர்பீர்பால் சிங் தொடங்கி வைத்தார்

Posted On: 04 JAN 2022 5:12PM by PIB Chennai

2022 என்சிசி குடியரசு தின முகாமை 2022 ஜனவரி 4 அன்று தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் என்சிசி தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜென்ரல் குர்பீர்பால் சிங் முறைப்படி தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் 29 வரை அணிவகுப்பு மைதானத்தில்  இந்த முகாம் நடைபெறும். இதில்  நாடு முழுவதிலுமிருந்து தனித்துவத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 2200 மாணவர்கள்  பங்கேற்பார்கள். சுமார் 1  மாதம் நடைபெறும் இந்த முகாமில் பயிற்சியில் தலைமையகங்களுக்கு இடையேயான போட்டிகள், கலாச்சார போட்டிகள், தேசிய ஒருமைப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் 2 தேசிய மாணவர் படை (என்சிசி) அணியினர்  அணிவகுத்து வருவார்கள்.

இந்த ஆண்டு கொவிட்-19 விதிமுறைகள் காரணமாக என்சிசி மாணவர்கள் எண்ணிக்கை 560, பெண்கள் உள்பட 1600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் ஜனவரி 28 அன்று பிரதமரின் அணிவகுப்பு மரியாதை ஏற்புடன் நிறைவடையும்

இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் பேசிய லெப்டினன்ட் ஜென்ரல் குர்பீர்பால் சிங் “இந்த முகாமின் நோக்கம் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிப்பது, அவர்களை மதிப்புமிகு நடைமுறைகளை ஆழப்படுத்துவது, நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவது ஆகும் என்றார்.

                                                  ***************



(Release ID: 1787451) Visitor Counter : 187


Read this release in: English , Urdu , Hindi , Marathi