ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாமின் தர்ராங்க் மாவட்டத்தில் முடிவெடுத்தலில் பெண்கள் பங்களிப்பை ஜல் ஜீவன் திட்டம் ஊக்குவிக்கிறது.

Posted On: 04 JAN 2022 12:36PM by PIB Chennai

ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் பொருளாதாரத்தைப் பொறுத்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால், எந்த ஒரு நாட்டின் வெற்றியையும் அளவிடுவதற்கான உண்மையான அளவுகோல், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அந்நாட்டுப் பெண்கள் எந்தளவு பங்கு வகிக்கிறார்கள் என்பது தான்.

ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் அசாமில் உள்ள தர்ராங்க் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் தீவிரமான பங்கேற்புடன் முன்னுதாரணமாக விளங்குகிறார்கள்.

அசாமின் தர்ராங்க் மாவட்டம், அதன் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் இருப்பிடம் காரணமாக அசாமின் சமூக-கலாச்சார சூழலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வடகிழக்கு – குவஹாத்தியின்  நுழைவாயிலுக்கு அருகாமையில் முக்கிய இடத்தில் இது அமைந்துள்ள போதிலும் மக்கள் எதிர்பார்த்த வகையில் மாவட்டம் வளர்ச்சி அடையவில்லை.

மெதுவான வளர்ச்சி அதன் முன்னேற்றத்தை பல வகைகளில் பாதித்த நிலையில், மற்ற மாவட்டங்களுக்கு இணையாக அதன் வளர்ச்சியை விரைவுபடுத்த, நிதி ஆயோக்கின் ஆர்வமுள்ள மாவட்ட திட்டத்தில் தர்ராங்க் சேர்க்கப்பட்டது.

தர்ராங்க் எதிர்கொள்ளும் பல கவலைகளில் ஒன்று கிராமப்புறங்களில் சுத்தமான குடிநீருக்கான தட்டுப்பாடு. தர்ராங்கில் உள்ள தண்ணீரின் தரம், மாசுபாடு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் திட்டம் மூலம் நிலைமை மாறியுள்ளது. மேலும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதற்கான இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான முடிவுகளை எடுப்பதில் பெண்கள் துடிப்புடன் பங்கேற்கிறார்கள். இம்மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்துவதில் துலிகோனா பவுண்டேஷன் ஈடுபட்டுள்ளது.

 மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787347

***************


(Release ID: 1787447) Visitor Counter : 203


Read this release in: English , Urdu , Hindi , Manipuri