பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நிறுவன தினத்தை கொண்டாடியது.
Posted On:
03 JAN 2022 6:04PM by PIB Chennai
டிஆர்டிஓ என அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தனது நிறுவன தினத்தை ஜனவரி 1, 2022 அன்று கொண்டாடியது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் செயலாளரும் டிஆர்டிஓ தலைவருமான டாக்டர். ஜி. சதீஷ் ரெட்டி, புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பணியாளர்கள் இடையே உரையாற்றினார்.
பாதுகாப்பு துறைக்கு தேவையான பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப பிரிவுகளில் டிஆர்டிஓ பணியாற்றுகிறது. நிறுவன தின நிகழ்ச்சியின் போது, டிஆர்டிஓ தலைமையகத்தின் தலைமை இயக்குநர்கள் மற்றும் இதர இயக்குநர்களுடன் இணைந்து டாக்டர் .ஏபிஜே அப்துல் கலாமின் திருவுருவச் சிலைக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் செயலாளரும் டிஆர்டிஓ தலைவருமான டாக்டர். ஜி. சதீஷ் ரெட்டி மலர் அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், டிஆர்டிஓ பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் பணியாளர்களின் உறுதி, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக பல்வேறு சாதனைகளை டிஆர்டிஓ நிகழ்த்தி உள்ளதாக கூறினார்.
இலக்குகளை எட்டுவதற்கு பங்காற்றிய நிதி ஆலோசகர்கள், பெருநிறுவன குழுக்கள், தொழில் துறையினர் மற்றும் அரசு துறையினரின் ஆதரவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787178
*********
(Release ID: 1787247)