அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நீராவி வெடிப்பினால் கொதிகலன்களில் ஏற்படும் விபத்துக்களை முன்கூட்டியே அறிந்து தடுக்கும் தொழில்நுட்ப உருவாக்கத்தில் ஸ்வர்ண ஜெயந்தி ஆய்வாளர் ஈடுபட்டுள்ளார்

Posted On: 03 JAN 2022 2:44PM by PIB Chennai

நீராவி வெடிப்பினால் கொதிகலன்களில் ஏற்படும் விபத்துக்களை முன்கூட்டியே அறிந்து தடுக்கும் தொழில்நுட்ப உருவாக்கத்தில் ஸ்வர்ண ஜெயந்தி ஆய்வாளரான ரிஷி ராஜ் ஈடுபட்டுள்ளார்.

அத்தகைய விபத்துக்களை தடுக்கும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்க செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல் விரைவில் பயன்படுத்தப்படலாம். 

கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் 23,000 கொதிகலன் விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, உலகளாவிய இறப்புகளில் இந்தியாவில் மட்டும் 34% ஏற்பட்டுள்ளன.

இந்த சவாலை எதிர்கொள்ளும் வகையில், ஐஐடி பாட்னாவில் உள்ள இயந்திர பொறியியல் துறையின் இணைப் பேராசிரியரும், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை  மூலம் இந்த ஆண்டுக்கான ஸ்வர்ணஜெயந்தி ஊக்கத்தொகை பெற்றவருமான ரிஷி ராஜ் பணியாற்றி வருகிறார்.

செயற்கை நுண்ணறிவு/இயந்திரக் கற்றலைப் பயன்படுத்தும் ஒரு புதிய தொழில்நுட்பத்தின் மூலம், கொதிகலன்களில்  நீராவி வெடிப்பினால் ஏற்படும் விபத்துக்களை முன்கூட்டியே கணிக்கவும் கட்டுப்படுத்தவும் தேவையான கருவிகளை அவர் உருவாக்கி வருகிறார்.

கொதி செயல்முறையை கட்டுப்படுத்துவதற்கான ஆன்லைன் கண்காணிப்புடன் கூடிய இந்த உள்நாட்டு தொழில்நுட்பம், முக்கிய தொழில்துறை மற்றும் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் கொதிகலன்களின் ஆரோக்கியம், செயல்திறன் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787111

***************



(Release ID: 1787205) Visitor Counter : 272


Read this release in: English , Urdu , Hindi , Bengali