குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அனைத்து துறைகளிலும் இந்தியாவை தற்சார்பாக்க குடியரசு துணைத்தலைவர் அறைகூவல்
प्रविष्टि तिथि:
02 JAN 2022 6:52PM by PIB Chennai
இந்தியாவை அனைத்து துறைகளிலும் முழு தற்சார்பு கொண்டதாக மாற்ற குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று அழைப்பு விடுத்தார்.
கொச்சியில் உள்ள கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களிடம் உரையாற்றிய அவர், பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு பொருட்களை அதிகரிப்பதன் அவசியத்தையும் இறக்குமதியைக் குறைக்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தினார்.
"அதை அடைவதற்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அதிக ஊக்கத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தனியார் துறை கூட்டை அனுமதிக்க வேண்டும். சாத்தியமான இடங்களில், கடுமையான தரக் கட்டுப்பாடுகளுடன் இது செய்யப்பட வேண்டும்", என்று திரு நாயுடு குறிப்பிட்டார்.
நீருக்கடியில் பாதுகாப்பிற்கு முக்கியமான சோனார் அமைப்புகளின் மேம்பாட்டிற்கு இன்றியமையாத "டோவ்டு அரே இன்டக்ரேஷன்” வசதிக்கு குடியரசு துணைத்தலைவர் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். அமைதியான எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் கடற்படையின் திறனை இது மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் பத்தாண்டுகளில் உலக வல்லரசாக உருவெடுக்க இந்தியா வலுவாக முன்னேறி வருகிறது என்று கூறிய அவர், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பிற துறைகளில் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் சிறந்த பணிகளைச் செய்த விஞ்ஞானிகளைப் பாராட்டினார்.
பாதுகாப்பு உபகரணங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதைக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், இந்தச் சூழலில், தேசத்தின் பாதுகாப்புத் தேவைகளில் வலுவூட்டுவதில் என்பிஓஎல் போன்ற சிறிய ஆய்வகத்தின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786957
****
(रिलीज़ आईडी: 1786997)
आगंतुक पटल : 332