சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் நாளை நாசிக்கில் மத்திய அரசு நலவாழ்வு மையத்தை தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
02 JAN 2022 11:04AM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், நாசிக்கில் நாளை மத்திய அரசின் சுகாதாரத்திட்ட நலவாழ்வு மையத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் நடைபெறவுள்ள கூட்டத்திலும் டாக்டர் பவார் உரையாற்றுவார். நாசிக் பாதுகாவல் அமைச்சர் திரு சாகன் புஜ்பால், நாசிக் மேயர் திரு சதீஷ் குல்கர்னி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சுபாஷ் பாம்ரே, ஹேமந்த் கோட்சே உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை, புனே, நாக்பூருக்கு அடுத்தபடியாக, மத்திய அரசின் நலவாழ்வு மையம் செயல்படவுள்ள நான்காவது நகராகும் நாசிக். நாசிக்கில், புதிய அலோபதி நலவாழ்வு மையத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 10-ம்தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாடு முழுவதும், 74 நகரங்களில் உள்ள நலவாழ்வு மையங்களில் 38.5 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786910
****
(रिलीज़ आईडी: 1786922)
आगंतुक पटल : 397