ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஜார்கண்டின் குடிநீர் விநியோக திட்டங்களுக்கு ரூ 9,544 கோடி ஒப்புதல்
Posted On:
31 DEC 2021 2:52PM by PIB Chennai
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஜார்கண்டிற்கான 315 குடிநீர் திட்டங்களுக்கு ரூ 9,544 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் மாநிலத்தின் 4,424 கிராமங்களில் உள்ள சுமார் 8 லட்சம் கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் வசதி பெறுவார்கள். .
ஆகஸ்ட் 15, 2019 அன்று, ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்ட போது, ஜார்க்கண்டில் 3.45 லட்சம் (5.83%) கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் நீர் விநியோகம் இருந்தது. 28 மாதங்களில், கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொதுமுடக்க இடையூறுகளுக்கு இடையிலேயும், 6.73 லட்சம் (11.38%) வீடுகளுக்கு குழாய் மூலம் நீர் இணைப்பை மாநிலம் வழங்கியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள 59.23 லட்சம் கிராமப்புற குடும்பங்களில், 10.18 லட்சம் (17.20%) வீடுகளில் குழாய் மூலம் நீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகத்தை வழங்குவதற்காக எடுக்கப்பட வேண்டிய திட்டங்களைப் பரிசீலிக்கவும் ஒப்புதல் அளிக்கவும் மாநில அளவிலான திட்ட அனுமதிக் குழு அமைப்பக்கபட்டுள்ளது.
மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், ஜார்கண்டிற்கு இந்த ஆண்டு ரூ. 2,479.88 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட நான்கு மடங்கு அதிகமாகும். 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலும் குழாய் மூலம் நீர் வழங்குவதற்கு மாநிலத்திற்கு முழு ஆதரவை வழங்க அவர் உறுதி அளித்தார். இதுவரை, ஜார்கண்டிற்கு ரூ. 512.22 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786548
*************************
(Release ID: 1786647)
Visitor Counter : 230