குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு மூலதன மானிய கடன் திட்டம்: தொழில் நிறுவனம் தொடங்கினார் ஸ்வேதா ஹரீஸ்

Posted On: 30 DEC 2021 4:04PM by PIB Chennai

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு மூலதன மானிய கடன் திட்டம் மூலம், பெங்களூரைச் சேர்ந்த திருமிகு ஸ்வேதா ஹரீஸ் என்பவர் தனது கனவு தொழில் நிறுவனத்தை தொடங்கினார்.

 

பெங்களூரில் அனுகிரகா இன்டீரியர் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனத்தை திருமிகு ஸ்வேதா ஹரீஸ் என்பவர் உருவாக்கினார். இதற்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் சிறப்பு மூலதன கடன் மானிய திட்டம் உதவியது.  பள்ளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கான நவீன பர்னிச்சர்களை வடிவமைக்க, சிலருடன் இணைந்து இந்த நிறுவனத்தை ஸ்வேதா உருவாக்கினார்.

 

செய்தி தாளில் உதயம் பதிவு திட்டத்தின் கீழ் வெளியான விளம்பரம் இவருக்கு வழிகாட்டியது. இவர்கள் தற்சார்புடையவர்களாக மாறுவதற்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை உதவியுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786314

 

 

*****



(Release ID: 1786424) Visitor Counter : 170


Read this release in: English , Urdu , Hindi , Telugu