சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

புலி இறப்புகள் குறித்த விளக்கம்

Posted On: 30 DEC 2021 5:55PM by PIB Chennai

2021-ம் ஆண்டில் புலிகள் இறப்பு குறித்த செய்திகளை  வெளியிட்டுள்ள சில ஊடகங்கள், நாட்டில் புலிகள் பாதுகாப்பு குறித்த தவறான பார்வையை வெளிப்படுத்தியுள்ளன.

 

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் இந்த செய்திகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றாலும், அவை பயன்படுத்தப்பட்ட விதம் பரபரப்பை உருவாக்கும் வகையில் உள்ளதோடு, இந்திய அரசின் தொழில்நுட்ப மற்றும் நிதி உள்ளீடுகள் காரணமாக புலிகளின் மரணங்களை குறைப்பதற்காக எடுக்கப்படும் நடைமுறைகளையும், அவற்றால் ஏற்பட்டுள்ள பலன்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

 

இந்திய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் முழு முயற்சியின் காரணமாக, புலிகளின் எண்ணிக்கை விளிம்பில் இருந்து மீட்கப்பட்டு உறுதியான பாதைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2006, 2010, 2014 மற்றும் 2018 ஆகிய நான்கு ஆண்டுகளில் செய்யப்பட்ட   அகில இந்திய புலிகள் மதிப்பீட்டின் கணக்கீட்டில் இது புலப்படுகிறது.

புலிகளின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 6% என்று இந்த முடிவுகள் காட்டியுள்ளன.

 

புலி வேட்டைகளை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் எடுத்து வருவதோடு உச்சபட்ச வெளிப்படைத்தன்மையை பின்பற்றுகிறது. புலிகள் இறப்புகள் குறித்த விவரங்களை www.tigernet.nic.in எனும் தளத்தில் பொதுமக்கள் கண்டு, அவர்களே மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786354

*********



(Release ID: 1786417) Visitor Counter : 282


Read this release in: English , Urdu , Hindi , Marathi