நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நுகர்வோர் பாதுகாப்புக்கான (மாவட்ட ஆணையம், மாநில ஆணையம் மற்றும் தேசிய ஆணையத்தின் அதிகார வரம்பு) விதிகள், 2021-ஐ மத்திய அரசு வெளியிட்டது

Posted On: 30 DEC 2021 5:34PM by PIB Chennai

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019-ன் விதிகள் வழங்கியுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நுகர்வோர் பாதுகாப்புக்கான (மாவட்ட ஆணையம், மாநில ஆணையம் மற்றும் தேசிய ஆணையத்தின் அதிகார வரம்பு) விதிகள், 2021-ஐ மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 

நுகர்வோர் தகராறுகளைத் தீர்ப்பதற்காக மாவட்ட ஆணையங்கள், மாநில ஆணையங்கள் மற்றும் தேசிய ஆணையம் ஆகிய மூன்றடுக்கு முறையை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 செயல்படுத்துகிறது. நுகர்வோர் ஆணையத்தின் ஒவ்வொரு அடுக்கின் அதிகார வரம்பும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, பரிசீலிக்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் புகார்களை விசாரிக்க மாவட்ட ஆணையங்களுக்கு அதிகாரம் உள்ளது.

 

பரிசீலனைக்குட்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு மேல், ஆனால் 10 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் புகார்களை விசாரிக்க மாநில ஆணையங்களுக்கு அதிகார வரம்பு உள்ளது.

 

ஆணையங்களின் புதிய அதிகார வரம்பு பின்வருமாறு இருக்கும்:

 

பரிசீலனைக்குட்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் புகார்களை விசாரிக்க மாவட்ட ஆணையங்களுக்கு அதிகாரம் உண்டு.

 

பரிசீலனைக்குட்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனால் 2 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் புகார்களை விசாரிக்கும் அதிகார வரம்பை மாநில ஆணையங்கள் கொண்டிருக்கும்.

 

பரிசீலனைக்குட்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் புகார்களை விசாரிக்கும் அதிகார வரம்பை தேசிய ஆணையம் கொண்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786342

************

 



(Release ID: 1786399) Visitor Counter : 1517


Read this release in: English , Urdu , Hindi , Bengali , Odia