சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

இரண்டு சக்கர வாகனங்களை ஏற்றிச் செல்லும் 3 அடுக்கு லாரி, மோட்டார் வாகனங்களுக்கான பாதுகாப்பு தேவைகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான விதிமுறைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியீடு

Posted On: 30 DEC 2021 5:08PM by PIB Chennai

இரண்டு சக்கர வாகனங்களை ஏற்றிச் செல்லும் 3 அடுக்கு லாரி, மோட்டார் வாகனங்களுக்கான பாதுகாப்பு தேவைகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான விதிமுறைகள் தொடர்பான அறிவிப்புகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  அவற்றின் விவரம் வருமாறு : 

 

2 சக்கர வாகனங்களை கொண்டு செல்லும் 3 அடுக்கு லாரிகள்:-

இரு சக்கர வாகனங்களை கொண்டு செல்ல 3 அடுக்கு கனரக வாகனங்களை அனுமதிக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை கடந்த டிசம்பர் 27ம் தேதி வெளியிட்டுள்ளது. ஆனால், லாரியின் சரக்கு ஏற்றும் பகுதி டிரைவர் கேபினின் உயரத்துக்கு  மேல் இருக்கக் கூடாது. இதன் மூலம் இரு சக்கர வாகனங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் 40 முதல் 50 சதவீத வாகனங்களை கூடுதலாக கொண்டு செல்ல முடியும்.

 

3 அடுக்கு லாரிகளின் நிலையான நிலைத்தன்மை மற்றும் மாறுபட்ட நிலைத்தன்மை சோதனைகளை ஆய்வு செய்தபின் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

 

இது தொடர்பான கருத்துக்கள் / ஆலோசனைகள் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து 30 நாட்களுக்குள் வரவேற்கப்படுகின்றன.

 

மோட்டார் வாகனங்களுக்கான பாதுகாப்பு தேவைகள்:-

 

மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் (CMVR), 1989-ன் விதி 93 மோட்டார் வாகனங்களுக்கான அளவுகளை தெரிவிக்கிறது.   மோட்டார் வாகனங்களின் நீளம் 23.25 மீட்டர், அகலம் 2.6 மீட்டர், உயரம் 4.5 மீட்டர் , வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் சரக்குகளின் எடை 55 டன்கள். இந்த வகை சரக்கு வாகனங்கள் குறிப்பிட்ட சாலைகளில் மட்டுமே செல்ல வேண்டும்.

 

மேலே உள்ளதை கருத்தில் கொண்டு, சிஎம்விஆர்  1989 விதிமுறைகளில் 12கே என்ற புதிய விதிமுறையை சேர்த்து  திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த டிசம்பர் 27ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில் மோட்டார் வாகனங்களின் பிரேக், எடைக்கு ஏற்றபடி சக்தி, ஒளி, இயங்குதிறன் போன்ற பாதுகாப்பு தேவைகள் அடங்கியுள்ளன.  2022 மார்ச் 1ம் தேதி முதல் மோட்டார் வாகனங்களுக்கான அனுமதி மற்றும் சான்றிதழ், வாகன தொழில் தரநிலை  (AIS)-113-ன்படி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான கருத்துக்கள் / ஆலோசனைகள் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து 30 நாட்களுக்குள் வரவேற்கப்படுகின்றன.

 

மின்சார வாகனங்களுக்கான விதிமுறைகள்:-

 

எம் மற்றும் என் பிரிவு வாகனங்களுக்கான  ( கார்கள் மற்றும் பயணிகளுக்கான வர்த்தக வாகனங்கள்) வாகன தொழில் தரநிலை (AIS) 038 திருத்தம், மின்சார வாகனங்களுக்கான புதிய தரநிலை  AIS 156  ஆகியவற்றை சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த  27ம் தேதி  S.O. 5419(E) என்ற அறிவிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.   இந்த அறிவிப்பு பேட்டரி பாதுகாப்பு அம்சத்தை உள்ளடக்கியது, இது மின்சார வாகனங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்போடு இணைக்கப்பட்டுள்ளது.  இது பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும். AIS 038 (திருத்தம் 2) உலகளாவிய தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப உள்ளது. 

 

மேற்கூறிய 3 அறிவிப்புகளுக்கான அரசாணையை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/dec/doc2021123041.pdf

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/dec/doc2021123071.pdf

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/dec/doc2021123061.pdf

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786336

****************

 



(Release ID: 1786396) Visitor Counter : 382


Read this release in: English , Urdu , Marathi , Hindi