ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் ரூ 15,381.72 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு ஒப்புதல்

Posted On: 30 DEC 2021 5:15PM by PIB Chennai

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 15,381.72 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் வழங்கும் திட்டங்களுக்கு மாநில அளவிலான திட்ட அனுமதிக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரேவாசத்னாசெஹோர்சித்திஅலிராஜ்பூர்பத்வானிஜபல்பூர்பன்னாமாண்ட்லாசாகர்கட்னிதார்ஷியோபூர்உமாரியா மற்றும் கர்கோன் மாவட்டங்களில் உள்ள 9,240 கிராமங்கள் இதன் மூலம் பயனடையும். 2023-ம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீர் விநியோகத்தை வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளதால்இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது இந்தத் தருணத்தில் மிகவும் முக்கியமானது ஆகும். 

இந்த கிராமங்கள் அனைத்தும் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 9,240 கிராமங்களில் வசிக்கும் 22 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு அடுத்த 30-40 ஆண்டுகளுக்கு போதுமான சுத்தமான குழாய் குடிநீர் விநியோகம் சீராக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் குடிநீர் விநியோகத்தை வழங்குவதற்காக எடுக்கப்படும் திட்டங்களின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக மாநில அளவிலான திட்ட அனுமதி குழு அமைக்கப்பட்டுள்ளது.

2021-22-ல் ரூ. 5,117 கோடி மத்தியப்பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்அதில் இருந்து ரூ 2,558 கோடி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால்தொலைதூர நீர் ஆதாரங்களில் இருந்து தினமும் பல மணிநேரம் பயணித்து தண்ணீர் எடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமம் வெகுவாகக் குறைக்கப்படும்.

ஆகஸ்ட் 15, 2019 அன்றுஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்ட போதுமாநிலத்தில் உள்ள 13.53 லட்சம் (11%) கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் விநியோகம் இருந்தது. கடந்த 28 மாதங்களில்கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொதுமுடக்க இடையூறுகள் இருந்தபோதிலும், 31.63 லட்சம் (25.8%) வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை மாநிலம் வழங்கியுள்ளது.

இன்றைய நிலவரப்படிமாநிலத்தில் உள்ள 1.22 கோடி கிராமப்புற குடும்பங்களில், 45.16 லட்சம் (36.93%) வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகம் செய்யப்படுகிறது. 2021-22-ல் 22.1 லட்சம் வீடுகளுக்கு குழாய் குடிநீர் இணைப்புகளை வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786334

****


(Release ID: 1786381) Visitor Counter : 260


Read this release in: English , Hindi , Telugu