சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைப்பெற்ற 35வது கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் 700க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

Posted On: 30 DEC 2021 4:02PM by PIB Chennai

புதுதில்லியில்  நடைப்பெற்ற 35வது கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் 30க்கும்  மேற்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர் என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

உள்நாட்டு பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற கருப்பொருளில் புதுதில்லி  ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பேட்டியளித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

அசாம்ஆந்திரப் பிரதேசம்பிஹார்குஜராத்லடாக்ஜம்மு-காஷ்மீர்பஞ்சாப் என 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள் இங்கு விற்பனைக்கு  வைக்கப்பட்டுள்ளன.

இங்கு நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளும் கிடைக்கின்றன. விஸ்வகர்மா வாடிகா என்ற பாரம்பரிய சர்க்கஸ் மற்றும் பிரபல இசைகலைஞர்களின் பல்வேறு கலாச்சார  இசை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன. இந்த கண்காட்சியில் உள்நாட்டு பொருட்களை வாங்கி கைவினை கலைஞர்களை மக்கள் ஊக்குவித்தனர்.

கைவினைப் பொருட்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும்வளர்க்கவும் சரியான தளம் ‘ஹூனார் ஹாத்’ என்ற கைவினைப் பொருட்கள் கண்காட்சி. 

நாட்டின் கலை மற்றும் கைவினை பாரம்பரியத்தை மட்டும் மத்திய அரசு பாதுகாக்காமல்உள்நாட்டு தயாரிப்புகளுக்கு புதிய சக்தி மற்றும் சந்தை  வாய்ப்புகளையும் அளிக்கிறது.

கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெறும் இடம் ஒரு நாளைக்கு 5 முறை சுத்தம் செய்யப்படுகிறது. இந்த கண்காட்சியை, 2022 ஜனவரி 5ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதிகளவில் மக்கள் வருவதால்இந்த  கண்காட்சியை 31ம் தேதி மாலையுடன் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786313

*****


(Release ID: 1786348) Visitor Counter : 217


Read this release in: English , Urdu , Hindi , Telugu