2021-ம் ஆண்டில் விளையாட்டு துறையின் பல்வேறு முன்முயற்சிகள், சாதனைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த சில முக்கிய அம்சங்கள் வருமாறு:
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் இது வரை இல்லாத அளவில் அதிக பதக்கங்களை இந்தியா வென்றது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்; தடகளப் பிரிவில் முதல் பதக்கம் இதுவாகும்.
மற்றொரு சிறந்த சாதனையாக, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020-ல் இதுவரை இல்லாத அளவில் 19 பதக்கங்களை இந்தியா வென்றது.
2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வென்றவர்களை நேரில் கவுரவிப்பதற்காக 2021-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி புது தில்லியில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தலைமையில் விழா நடைபெற்றது.
72 சிறந்த விளையாட்டு வீரர்கள்/பயிற்சியாளர்களுக்கு தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
17 நவம்பர் 2021 அன்று புது தில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் 246 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிறுவன விருதுகளை திரு அனுராக் தாக்கூர் வழங்கினார்.
2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு ஊக்குவிப்புத் திட்டங்களின் கீழ் சிறப்பான செயல்திறனுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விளையாட்டு மருத்துவம் மற்றும் மறுவாழ்வு ஆதரவை மேம்படுத்துவதற்காக மத்திய தடகள காயம் மேலாண்மை அமைப்பு தொடங்கப்பட்டது.
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையின் (வாடா) அங்கீகாரத்தை தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகம் மீண்டும் பெற்றது.
மொத்தம் ரூ.114.30 கோடி மதிப்பீட்டில் 7 மாநிலங்களில் 143 கேலோ இந்தியா மையங்கள் தொடங்கப்பட்டன.
கொவிட்-19-ன் போது முன்னாள் சர்வதேச விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மருத்துவம், நிதி மற்றும் தளவாட உதவிகளை வழங்க சிறப்பு ஆதரவு பிரிவு உருவாக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=178628
-----------------------