அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் இதழை இந்தி, உருது மற்றும் ஆங்கிலத்தில் மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.

Posted On: 29 DEC 2021 4:03PM by PIB Chennai

இந்தி, உருது மற்றும் ஆங்கிலத்தில் அறிவியல் மாத இதழை வெளியிட்ட மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங் டோக்ரி, கஷ்மீரி உள்ளிட்ட இதர உள்ளூர் மொழிகளில் இது விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.

 

இந்தி மற்றும் ஆங்கில பதிப்புகள் இந்தியாவின் 100-வது ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் "கனவு 2047" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ள நிலையில், உருது பதிப்பிற்கு தஜாஸ்ஸஸ் (ஆர்வம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது.

 

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். ஜிதேந்திர சிங், இளைஞர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக வட்டார மொழிகளைப் பயன்படுத்தி அறிவியல் தகவல் தொடர்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி "பெரிய அளவில்" ஊக்குவிப்பதாகக் கூறினார். மேலும், மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்றும், வசதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

 

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையிலிருந்து பிரதமர் திரு. மோடி ஆற்றிய உரையைப் பற்றிக் குறிப்பிட்ட டாக்டர். ஜிதேந்திர சிங், ஏழைக் குழந்தைகளுக்கு தாய்மொழியில் கல்வியின் முக்கியத்துவத்தை தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது என்றார்.

 

திரு. மோடியை மேற்கோள் காட்டிய அவர், “நம் நாட்டில் மொழி காரணமாக ஒரு மிகப்பெரிய பிளவு உள்ளது, பெரிய திறமைகள் இந்த கூண்டில் அடைபட்டுள்ளன. வட்டார மொழிகளை பேசும் மக்கள் முன் வந்தால், அவர்களின் தன்னம்பிக்கை வளரும்”, என்றார்.

 

இந்திய மொழிகளில் அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கல்வியை மேம்படுத்துவது தற்போதைய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும், மாணவர்களுக்கு வட்டார மொழிகளில் அறிவியல் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786064

                           *******************************


(Release ID: 1786139) Visitor Counter : 254