நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நுகர்வோர் பாதுகாப்பு (நேரடி விற்பனை) விதிமுறைகள், 2021-ஐ அறிவித்தது மத்திய அரசு.
प्रविष्टि तिथि:
28 DEC 2021 6:54PM by PIB Chennai
நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி , நுகர்வோர் பாதுகாப்பு(நேரடி விற்பனை) விதிமுறைகள், 2021-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள், நேரடியாக வாங்கப்படும் அல்லது விற்கப்படும் அனைத்து சரக்குகள் மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும். நேரடி விற்பனையில் பல நிறுவனங்கள் முறைகேடான வர்த்தக முறையை பின்பற்றுகின்றன. இந்த அறிவிப்பு அரசிதழில் வெளியான 90 நாட்களுக்குள், தற்போதுள்ள நேரடி விற்பனை நிறுவனங்கள், இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மின்னணு- விற்பனை தளங்களை பயன்படுத்தி நேரடி விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களும், நுகர்வோர் பாதுகாப்பு (மின்னணு-வர்த்தகம்) விதிமுறைகள், 2020-ஐ பின்பற்ற வேண்டும்.
நேரடி விற்பனை நிறுவனங்கள், வியாபாரிகள் பிரமிட் திட்டங்கள், பண சுழற்சி திட்டங்களில் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது. நேரடி விற்பனை நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785873
**************************
(रिलीज़ आईडी: 1785927)
आगंतुक पटल : 1907