குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம்- தற்சார்பை நோக்கிய அஞ்சு தேவியின் பயணம்.

Posted On: 28 DEC 2021 2:04PM by PIB Chennai

பீகாரைச் சேர்ந்தவர் அஞ்சு தேவி. மதுபனி ஓவியத்தில் டிப்ளமோ பெற பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் (#PMEGP) அவருக்கு உதவியதோடு அவரது நிறுவனத்தைத் தொடங்க கடனையும் வழங்கியது.

மதுபனி கலையின் மீதான தனது ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அவர், அதை ஒரு பொருளாதார வாய்ப்பாக மாற்றவும், அழிந்து வரும் கலைக்கு புத்துயிர் அளிக்கவும் முடிவு செய்தார். இன்று, எஸ்.எஸ்.டி மிதிலா ஆர்ட்ஸ் என்ற அவரது நிறுவனம் அவரை ஒரு பெருமைமிக்க தொழில்முனைவோராக மாற்றியதோடு மட்டுமல்லாமல், பல பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்களை தற்சார்புடையவர்களாகவும் மாற்றியுள்ளது.

உங்களுக்கு விருப்பமான ஒரு பணியை தேர்ந்தெடுங்கள், உங்களை அது தன்னம்பிக்கையுள்ளவர்களாக ஆக்கும். அதே நேரத்தில் உங்களைச் சுற்றியுள்ள மற்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. கடின உழைப்பு, விடாமுயற்சி, தரமான தயாரிப்பு மற்றும் தொடர் புதுமைகள் ஆகியவை வெற்றிக்கு வழிவகுக்கும்," என்பது இதர பெண்களுக்கு அவர் கூறும் செய்தி ஆகும்.

நிதி மற்றும் பயிற்சி ஆதரவை பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் வழங்குகிறது, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அஞ்சு தேவி மற்றும் பலருக்கு வெற்றிக்கான பாதையை அமைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785765

                                                                                ******************************

 

(Release ID: 1785765)

 

 



(Release ID: 1785870) Visitor Counter : 179