பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடற்படை அகாடமி, எழிமலாவின் தலைமைப் பொறுப்பை வைஸ் அட்மிரல் புனீத் கே பஹல் ஏற்றுக் கொண்டார்

Posted On: 27 DEC 2021 5:50PM by PIB Chennai

இந்திய கடற்படை அகாடமி, எழிமலாவின் தலைமைப் பொறுப்பை 2021 டிசம்பர் 26 அன்று வைஸ் அட்மிரல் புனீத் கே பஹல் ஏற்றுக் கொண்டார். 1984-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைந்த என்டிஏ, கடக்வஸ்லா மாணவரான இவர், வெல்லிங்கனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மற்றும் மும்பயில் உள்ள கடற்படை போர்திறன் கல்லூரியில் பயின்றுள்ளார்.

 

அனுபவம் வாய்ந்த கடல்சார் கண்காணிப்பு பைலட்டான இவர், ஆறு வகையான விமானங்களை ஓட்டியுள்ளார். தகுதிவாய்ந்த கப்பல் நிபுணராகவும் அவர் திகழ்கிறார். சவாலான செயல்பாட்டு மற்றும் பயிற்சிப் பணிகளை வைஸ் அட்மிரல் புனீத் கே பஹல் மேற்கொண்டுள்ளார்.

 

ஐஎன்எஸ் கருடா, ஐஎன்எஸ் ராஜாளி, ஏஎஃப்எஸ் யெலஹங்கா மற்றும் சிஜிஏஎஸ் 700 ஆகிய இடங்களிலும், ஐஎன்எஸ் விக்ராந்த், பேட்வா, கோதாவரி, சுஜாதா மற்றும் போர்பந்தர் ஆகிய கப்பல்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

 

2020-ல் அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், 2015-ல் விஷிஷ்ட் சேவா பதக்கம், 2005-ல் கடற்படைத் தளபதியின் பாராட்டு பத்திரம் மற்றும் 1998-ல் வெலிங்டன் பாதுகாப்பு சேவைகள் பயிற்சி கல்லூரியில் லெண்டைக்ன் பதக்கம் உள்ளிட்டவை இவருக்கு வழங்கப்பட்டன.

அவரது மனைவியின் பெயர் அஞ்சலி பஹல் ஆகும். இந்த தம்பதியினருக்கு துருவ் பஹல் மற்றும் ராபின் பஹல் எனும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785571

***************

 



(Release ID: 1785623) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Hindi