சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கனிம உற்பத்தி 20.4% அதிகரிப்பு

Posted On: 27 DEC 2021 4:49PM by PIB Chennai

இந்திய சுரங்கப் அலுவலகத்தின் தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, 2021 அக்டோபர் (அடிப்படை: 2011-12=100) மாதத்திற்கான சுரங்க மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்தியின் குறியீடு 109.7 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இது 20.4% அதிகமாகும். 2020-21 ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

2021 அக்டோபரில் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி அளவு பின்வருமாறு: நிலக்கரி 639 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 37 லட்சம் டன், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 2954 மில்லியன் கியூ. மீ., பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், பாக்சைட் 1792 ஆயிரம் டன், குரோமைட் 130 ஆயிரம் டன், திட செம்பு 11 ஆயிரம் டன் , தங்கம் 109 கிலோ, இரும்பு தாது 190 லட்சம் டன், திட ஈயம் 33 ஆயிரம் டன், மாங்கனீஸ் தாது 202 ஆயிரம் டன், திட ஜிங்க் 137 ஆயிரம் டன், சுண்ணாம்பு 319 லட்சம் டன், பாஸ்போரைட் 127 ஆயிரம் டன், மேக்னசைட் 10 ஆயிரம் டன், வைரம் 24 காரட்.

 

முக்கியமான தாதுக்களின் உற்பத்தி 2020 அக்டோபருடன் ஒப்பிடும் போது 2021 அக்டோபரில் நேர்மறையான வளர்ச்சியை பின்வருமாறு கண்டுள்ளன: தங்கம் (55.7%), பழுப்பு நிலக்கரி (49.7%), மேக்னசைட் (33.1%), குரோமைட் (30%), இயற்கை எரிவாயு (யு) (25.8% ) மற்றும் நிலக்கரி (14.5%).

 

எதிர்மறை வளர்ச்சியைக் காட்டும் மற்ற முக்கியமான தாதுக்களின் உற்பத்தி பின்வருமாறு: வைரம் (-98.8%), பாஸ்போரைட் (-25.5%), பெட்ரோலியம் (கச்சா) (-2.2%).

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785544

************


(Release ID: 1785604) Visitor Counter : 210
Read this release in: English , Urdu , Hindi