பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கதுவா பசோலியில் ‘சிறந்த ஆளுகை வார’ கூட்டம்: மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் பங்கேற்பு.
இடுகை இடப்பட்ட நாள்:
26 DEC 2021 6:43PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதன் மூலம், இன்று கீழ்மட்ட அளவிலான ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது என மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் கதுவாவில், மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த ஆளுகை வார கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு பேசியதாவது:
ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக நடைபெறாமல் இருந்த மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கு முன்னுரிமை அளித்தது , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அடிமட்ட அளவிலான ஜனநாயகத்தை வலுப்படுத்தியதற்கு சான்றாக உள்ளது. தற்போது இங்கு அனைத்தும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற மத்திய அரசின் மந்திரத்தை வலியுறுத்துகிறது. இதில் அனைவருக்கும் நீதி கிடைக்கிறது. எந்தவித பாகுபாடும் இல்லாமல், அனைவருக்கும் சம உரிமை என்ற அடிப்படையில் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாகத்தில் அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
உலகளவில் உள்ள இளைஞர்களில் 70 சதவிகிததிற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் உள்ளனர். புதிய இந்தியாவின் நிர்வாகம் மற்றும் குடிமை பணிக்கும் அவர்களின் சுறுசுறுப்பும், உற்சாகமும் தேவைப்படுகிறது.
வளர்ச்சி பணிகளை தொலைதூர பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு டாக்டர் ஜித்தேந்திர சிங் பேசினார்.
பசோலியில் மாணவிகளுக்கான விடுதிகளுடன் கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் பல வளர்ச்சி திட்டங்களையும் டாக்டர் ஜிதேந்திர சிங் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785355
***********
(வெளியீட்டு அடையாள எண்: 1785365)
வருகையாளர் எண்ணிக்கை : 261