பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை திறம்பட தீர்மானிக்கும் வகையில் குடிமை பணிகளுக்கு தொலைநோக்கு பார்வையை வழங்குதே கர்மயோகி இயக்கத்தின் லட்சியமாகும்: மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங்
Posted On:
23 DEC 2021 3:31PM by PIB Chennai
அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை திறம்பட தீர்மானித்து 2047-ம் ஆண்டில் விடுதலையின் நூற்றாண்டை கொண்டாடும் இந்தியாவை வடிவமைக்கும் வகையில் குடிமை பணிகளுக்கு தொலைநோக்கு பார்வையை வழங்குதே கர்மயோகி இயக்கத்தின் லட்சியம் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
நல்லாட்சி வாரத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக, மிஷன் கர்மயோகி - முன்னோக்கி செல்லும் பாதை குறித்த பயிலரங்கில் உரையாற்றிய டாக்டர். ஜிதேந்திர சிங், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் புதிய இந்தியாவுக்கான இலக்கை அடைய, ஆளுகை முறையில் "ஆட்சி" என்பதிலிருந்து "பங்களிப்பு" என்பதற்கு மாறுவது இன்றியமையாத தேவை என்று கூறினார்.
உயர்சிறப்பு எனும் சூப்பர் ஸ்பெஷலைசேஷன் யுகத்தில் நாம் நுழைவதால் நிர்வாகத்திற்கு இது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் கூறினார். குடிமைப் பணியில் இருப்போருக்கு கடமைகளை செவ்வனே ஆற்றும் திறன், மேம்பாட்டு அணுகுமுறை தேவை என்றும், அதுவே கர்மயோகி இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.
ஒருங்கிணைப்பு என்ற கருப்பொருளில் பேசிய டாக்டர். ஜிதேந்திர சிங் , மிஷன்-கர்மயோகி ரிசோர்ஸ் செல் ஒன்றை இந்திய பொது நிர்வாக நிறுவனம் நிறுவியுள்ளது என்றும் தேசிய திறன் மேம்பாட்டு ஆணையம், எல்பிஎஸ்என்ஏஏ மற்றும் பிற மத்திய பயிற்சி நிறுவனங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயல்படுகிறது என்றும் கூறினார்.
அரசுப் பணியாளர்கள் படைப்புத்திறன் மிக்கவர்களாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்க வேண்டுமென்ற பிரதமரின் அறிவுரையைக் குறிப்பிட்ட டாக்டர். ஜிதேந்திர சிங், அவர்கள் கற்பனைத்திறனோடும், புதுமை உணர்வோடும், செயல்திறனோடும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்றும், தொழில்திறன் மிக்கவர்களாகவும், ,முற்போக்கானவர்களாகவும், , சுறுசுறுப்பாகவும் திறமையாகவும் பயனுள்ள வகையிலும் இருக்க வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொலைநோக்கு லட்சியத்தை அடைய, நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் சரியான அணுகுமுறைகள், திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இதைக் கருத்தில் கொண்டு, குடிமை பணிகள் திறன் மேம்பாட்டுக்கான தேசியத் திட்டத்தை தொடங்குவது உட்பட பல முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784572
*******************
(Release ID: 1784641)
Visitor Counter : 200