வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மின் வணிகத்தில் உள்ள சவால்கள்.
இடுகை இடப்பட்ட நாள்:
22 DEC 2021 3:06PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திரு. சோம் பர்காஷ் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
பல்வேறு துறைகளில் மின்வணிகம் இயங்குவதால் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, போட்டியியல் சட்டம் 2002, நிறுவனங்கள் சட்டம் 2013, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 உள்ளிட்டவற்றால் அது ஒழுங்குப்படுத்தப்படுகிறது.
டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமுதாயமாகவும் அறிவு சார்ந்த பொருளாதாரமாகவும் இந்தியாவை மாற்றுவதற்காக டிஜிட்டல் இந்தியா எனும் திட்டத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
மின் வணிக வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் மின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் விதிக்கும் கேன்சலேஷன் கட்டணங்களுக்கு எதிரான பல்வேறு விதிமுறைகளை நுகர்வோர் பாதுகாப்பு (மின் வணிகம்) விதிகள் 2020 கொண்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டம் உள்ளிட்டவற்றின் மூலம் மின் வணிகத்திற்கு ஊக்கமளிக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. சிறு சில்லறை வணிகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் போன்று அதிகமானோரை சென்றடைவதற்கான பல்வேறு மின் வணிக முயற்சிகளுக்கு இத்திட்டம் உதவுகிறது. ஒருங்கிணைந்த கட்டண தளம் (யுபிஐ), அரசு மின் வணிக தளம் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784185
************************
(வெளியீட்டு அடையாள எண்: 1784359)
வருகையாளர் எண்ணிக்கை : 219