சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள்.
Posted On:
22 DEC 2021 2:49PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
மின்சார வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் பின்வருமாறு:
பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் கட்டணம் செலுத்துவதில் இருந்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது.
பேட்டரிகள் இல்லாத மின்சார வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவு தொடர்பான ஆலோசனையை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வழங்கியுள்ளது.
மாற்று எரிபொருள்களின் உமிழ்வு தரநிலைகள் தொடர்பான பல்வேறு விதிகள்/விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் வழங்கப்படும் சாலையோர வசதிகளின் ஒரு பகுதியாக சாலை உருவாக்க நிறுவனத்தால் மின்சார வாகன சார்ஜிங் நிலைய வசதிகள் வழங்கப்பட உள்ளன.
இதுபோன்ற 39 வசதிகளை ஏற்கனவே ஆணையம் வழங்கியுள்ளது மற்றும் 103 வசதிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே வழங்கப்பட்ட பணிகள் 2022-23 நிதியாண்டின் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784174
******
(Release ID: 1784325)