பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
கடத்தலில் தப்பியவர்களுக்கான நிர்பயா நிதி
Posted On:
22 DEC 2021 1:43PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிரிதி சுபின் இராணி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
கொரோனா பெருந்தொற்று காலத்தில், மனித கடத்தலை தடுப்பது பற்றி அறிவுறுத்தல்களை அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி வழங்கியது.
கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் இருந்து தப்பியவர்களுக்கு சட்ட உதவிகளை அளித்து மறுவாழ்வு வழங்க ‘நல்சா’ என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. மனித கடத்தல் சம்பவங்கள் தடுப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக ‘உஜ்ஜாவலா’ திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அமல்படுத்தியது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டங்களை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அறிவித்தன. இதற்கு உதவ, உள்துறை அமைச்சகம் நிர்பயா நிதியிலிருந்து கடந்த 2016-17ம் ஆண்டில் ரூ.200 கோடியை மானியமாக வழங்கியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க இந்த நிதியை மாநிலங்கள் பயன்படுத்தின. இதன் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784153
******************************
(Release ID: 1784318)
Visitor Counter : 164