பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

தேசிய குழந்தைகள் காப்பகங்கள் திட்டம்

Posted On: 22 DEC 2021 1:38PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி. ஸ்மிரிதி சுபின் இராணி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

வேலை செய்யும் தாய்மார்களின் குழந்தைகளுக்கான தேசிய குழந்தைகள் காப்பக திட்டத்தை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மூலம் 01.01.2017 முதல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூன்றாம் நபர் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக 2020-ம் ஆண்டு நிதி ஆயோக்கால் ஆய்வு நடத்தப்பட்டு, மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டது. மேலும், உள்கட்டமைப்பு இடைவெளிகளை போக்கவும், காப்பக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில், அதாவது 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில், வேலை செய்யும் தாய்மார்களின் குழந்தைகளுக்கான தேசிய குழந்தைகள் காப்பக திட்டத்தின் கீழ் நாட்டில் செயல்படும் மையங்களின் எண்ணிக்கை முறையே 18040, 8018 மற்றும் 6458 ஆகும்.

கொவிட் பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க நாட்டில் கொரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து குழந்தைகள் காப்பகங்கள் செயல்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784149

******



(Release ID: 1784304) Visitor Counter : 234


Read this release in: Urdu , English , Telugu