பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் இலக்குகள் மற்றும் நோக்கங்கள்
Posted On:
22 DEC 2021 1:38PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி. ஸ்மிரிதி சுபின் இராணி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
அங்கன்வாடி சேவைகள் (ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டம்) என்பது பின்வரும் நோக்கங்களுடன் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதியுதவி பெற்ற திட்டமாகும்:
* 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல்.
* குழந்தைகளின் சரியான உளவியல், உடல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தல் .
* இறப்பு, நோயுற்ற தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பள்ளி இடைநிற்றல் நிகழ்வுகளை குறைத்தல்.
* குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு துறைகளுக்கு இடையே கொள்கை மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றின் பயனுள்ள ஒருங்கிணைப்பை அடைதல்.
* சரியான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி மூலம் குழந்தையின் இயல்பான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை கவனிக்கும் தாயின் திறனை மேம்படுத்துதல்.
துணை ஊட்டச்சத்து; முன்பள்ளி முறைசாரா கல்வி; ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி; நோய்த்தடுப்பு; சுகாதார பரிசோதனை; மற்றும் நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களின் மூலம் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் பரிந்துரை சேவைகள் வழங்குதல் ஆகிய ஆறு சேவைகளின் தொகுப்பு, அங்கன்வாடி சேவைகளின் கீழ் வழங்கப்படுகிறது.
இந்த சேவைகளின் மூலம் 2018-19-ம் ஆண்டு 70374122 குழந்தைகள், 17186549 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 87560671 பயனடைந்துள்ளனர்.
2019-20-ம் ஆண்டு 68630173 குழந்தைகள், 16874975 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 85505148 பயனடைந்துள்ளனர்.
2020-21-ம் ஆண்டு 67509696 குழந்தைகள், 15673127 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 83182823 பயனடைந்துள்ளனர்.
2021-22-ம் ஆண்டில் 2021 ஜூன் 30 வரை 73691025 குழந்தைகள் ,16925928 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 90616953 பயனடைந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784152
******
(Release ID: 1784252)