இந்திய போட்டிகள் ஆணையம்
ஏர் இண்டியா, ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இண்டியா சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் பங்குகளை டேலஸ் பிரைவேட் லிமிடெட் வாங்கிக் கொள்வதற்கு இந்திய போட்டிகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
20 DEC 2021 6:01PM by PIB Chennai
ஏர் இண்டியா, ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இண்டியா சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் பங்குகளை டேலஸ் பிரைவேட் லிமிடெட் வாங்கிக் கொள்வதற்கு இந்திய போட்டிகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏர் இண்டியா மற்றும் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மூலதனப் பங்குகளை 100% அளவுக்கும், ஏர் இண்டியா சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் பங்குகளை 50% அளவுக்கும், பேலஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்தவுள்ளது.
டேலஸ் நிறுவனம் முற்றிலும் டாடா சன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான துணை நிறுவனமாகும். ஏர் இண்டியா மற்றும் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் மற்றும் சரக்கு விமான சேவைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஏர் இண்டியா சாட்ஸ் நிறுவனம் தில்லி, பெங்களுரு, ஹைதராபாத், மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் உள்நாட்டு விமான நிலையங்களில் தரைக்கட்டுப்பாட்டு சேவைகளையும், பெங்களுரு விமான நிலையத்தில் கையாளும் சேவையையும் கையாண்டு வருகிறது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783550
•••••••••••
(Release ID: 1783605)
Visitor Counter : 206