பாதுகாப்பு அமைச்சகம்
மிக்-21 விமானம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 DEC 2021 3:04PM by PIB Chennai
தேஜஸ் விமானங்கள் மிக்-21 போர் விமானங்களுக்கு மாற்றாக சேர்க்கப்படவில்லை என்றும், மாறாக இந்திய விமானப்படையின் நவீன மயமாக்கலின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய்பட் தெரிவித்துள்ளார்.
இதுவரை 24 இலகு ரக தேஜஸ் விமானங்கள் தயாரிக்க 30.09.2021 வரை ரூ.6,653 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, மொத்தம் 123 தேஜஸ் போர் விமானங்கள் தயாரிக்கப்படவிருப்பதுடன், இந்திய பாதுகாப்புப் படைகள் / வாடிக்கையாளர்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தேவையின் அடிப்படையில் மேலும் உற்பத்தி செய்யப்படும் என்றும் திரு அஜய் பட் கூறியுள்ளார்.
•••••••••
(வெளியீட்டு அடையாள எண்: 1783586)
வருகையாளர் எண்ணிக்கை : 331