பாதுகாப்பு அமைச்சகம்
படைக்கல தொழிற்சாலை வாரியம்
Posted On:
20 DEC 2021 3:03PM by PIB Chennai
படைக்கல தொழிற்சாலைகளின் செயல்பாட்டு சுதந்திரம், பணித் திறனை மேம்படுத்தவும், புதிய வளர்ச்சித் திறனை வெளிப்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஏதுவாக, படைக்கல தொழிற்சாலைகள் வாரியத்தின் 41 உற்பத்திப் பிரிவுகள், பாதுகாப்புத் துறைக்கு உட்பட்ட 7 பொதுத்துறை நிறுவனங்களாக 1 அக்டோபர் 2021 முதல் மாற்றப்பட்டுள்ளதாக, மாநிலங்களவையில் திருமதி அம்பிகா சோனியின் கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய்பட் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தமிழ்நாட்டில், அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை, திருச்சியில் உள்ள ஹை எனர்ஜி புரொஜெக்டைல் தொழிற்சாலை ஆகியவை புனேயை தலைமையிடமாக கொண்ட முனிசன்ஸ் இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும், ஆவடியில் உள்ள எஞ்சின் தொழிற்சாலை மற்றும் கனரக வாகன தொழிற்சாலைகள், சென்னை ஆவடியை தலைமையிடமாக கொண்ட அவானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும், திருச்சிராப்பள்ளியில் படைக்கல தொழிற்சாலை, கான்பூரை தலைமையிடமாக கொண்ட ஏவ் இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783417
•••••••••••••••
(Release ID: 1783585)