பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரி மற்றும் மேல் வரியாக ரூ. 4,55,069 கோடி வசூல்.
Posted On:
20 DEC 2021 3:16PM by PIB Chennai
மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் திரு. ராமேஸ்வர் தெலி, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில், கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையிலிருந்து மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய், மாநில அரசுகள் வசூலித்த விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி விவரங்களை தெரிவித்தார்.
2020-21ம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் மத்திய அரசு வரியாக வசூலித்த தொகை ரூ.4,55,069 கோடி. விற்பனை மற்றும் மதிப்பு கூட்டு வரியாக தமிழகம் கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.17,063 கோடியும், புதுச்சேரி ரூ.10 கோடியும் வசூலித்துள்ளன.
பெட்ரோல், டீசலுக்கு மத்திய, மாநில அரசுகள் கடந்த 5 ஆண்டுகள் வசூலித்த வரி விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783429
********************
(Release ID: 1783584)