பாதுகாப்பு அமைச்சகம்
இ-சாவனி திட்டத்தின் கீழ் கண்டோன்ட்மென்ட் வாரியத்தில் குடியிருப்போருக்கு ஜிஐஎஸ் அடிப்படையிலான தானியங்கி தண்ணீர் விநியோக நடைமுறை
Posted On:
20 DEC 2021 11:21AM by PIB Chennai
கண்டோன்ட்மென்ட் வாரியங்களில் குடியிருப்போருக்கு புவிசார் தகவல் முறை அடிப்படையிலான ‘தானியங்கி தண்ணீர் விநியோக நடைமுறை‘, ராணுவ எஸ்டேட் தினம்-2021-ன் போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.
பாதுகாப்புத் துறை செயலாளர் மற்றும் தில்லியில் உள்ள ராணுவ எஸ்டேட் தலைமை இயக்குநரின் வழிகாட்டுதலின் படி, பாஸ்கராச்சாரியா, விண்வெளி பயன்பாடு மற்றும் புவிசார் தகவல் நிறுவனத்தால், கண்டோன்ட்மென்ட் வாரியங்களுக்காக புவிசார் தகவல் முறை அடிப்படையிலான தண்ணீர் விநியோக நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் தண்ணீர் இணைப்பு வழங்க வகை செய்யும் இந்த புதிய நடைமுறை, கண்டோன்ட்மென்டுகளில் குடியிருப்போர் தங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டிய இடத்தை அறிந்து கொள்ளும் வசதியை அளிப்பதுடன், அருகில் உள்ள தண்ணீர் குழாயை தானியங்கி முறையில், கண்டறிகிறது. அத்துடன் பயனாளிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் ஆன்லைன் முறையிலேயே கணக்கிட்டு செலுத்துவதற்கும் வகை செய்வதாக பாதுகாப்பு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
******************
(Release ID: 1783392)
Visitor Counter : 223