எஃகுத்துறை அமைச்சகம்
மண்டி கோபிந்த்கர் எஃகு வளாகத்தைப் பார்வையிட்ட மத்திய எஃகுத்துறை அமைச்சர்
Posted On:
18 DEC 2021 7:00PM by PIB Chennai
பஞ்சாபின் ஃபத்தேகர் சாஹிப் மாவட்டம், மண்டி கோபிந்த்கர் பகுதியில் உள்ள தேசிய இடைநிலை எஃகுத் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய எஃகுத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இன்று (18.12.2021) ஏற்பாடு செய்திருந்த தொழிலதிபர்கள் கலந்துரையாடல் சந்திப்பில், மத்திய எஃகுத் துறை அமைச்சர் திரு. ராம் சந்திர பிரசாத் சிங் கலந்துகொண்டார்.
அகில இந்திய அளவிலான எஃகு தொழில் துறையைச் சேர்ந்த பல்வேறு சங்கங்கள் பங்கேற்ற இந்த சந்திப்பில் பேசிய அமைச்சர், இந்திய எஃகு தொழில் துறையின் முக்கிய அங்கமாக, இரண்டாம் நிலை எஃகுத் தொழில் நிறுவனங்கள் திகழ்வதாகக் கூறினார். இந்த நிறுவனங்கள் 2030-31ம் ஆண்டில் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தித் திறனை எட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த இலக்கை அடைய, இரண்டாம் நிலை எஃகு தொழில் நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய திரு.ராம்சந்திர பிரசாத் சிங், இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எஃகுத் துறை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
**************
(Release ID: 1783122)
Visitor Counter : 289