சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்களின் சுதந்திரம், கண்ணியம், அதிகாரமளித்தல் மற்றும் அரசியல் சாசன சமத்துவம் போன்றவற்றில், “தாலிபன் மனப்பான்மை“ இந்தியாவில் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்

Posted On: 18 DEC 2021 5:15PM by PIB Chennai

பெண்களின் சுதந்திரம், கண்ணியம், அதிகாரமளித்தல் மற்றும் அரசியல் சாசன சமத்துவம் போன்றவற்றில்,  “தாலிபன் மனப்பான்மை“ இந்தியாவில் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.  தேசிய சிறுபான்மையினர் ஆணையம் புதுதில்லியில் இன்று (18.12. 2021) ஏற்பாடு செய்திருந்த “சிறுபான்மையினர் தினக் கொண்டாட்ட“   நிகழ்சசியில் அவர் உரையாற்றினார்.  

சமூக தீமையாக கருதப்படும் முத்தலாக் நடைமுறை குற்றமாக்கப்பட்டதை எதிர்ப்போர் அல்லது மெஹரத்துடன் ஹஜ் புனதி யாத்திரை மேற்கொள்ள இஸ்லாமிய பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதை எதிர்த்து கேள்வி எழுப்புவோரும் தான், பெண்களின் திருமண வயது தொடர்பான அரசியல் சாசன சமத்துவத்திற்கு எதிராக தற்போது சலசலப்பை உருவாக்கி வருவதாகவும், இவர்கள், இந்திய அரசியல் சாசனத்தின் சாராம்சத்திற்கு எதிர்ப்பதை  “தொழிலாகக் கொண்ட போராட்டக்காரர்கள்“ என்றும் திரு.நக்வி தெரிவித்துள்ளார். 

“முன்னேற்றம் மற்றும் கண்ணியத்திற்கான உறுதிப்பாடு“ மூலம், “போலியான சமாதானப்படுத்துதலை அரசு தகர்த்தெறிந்துள்ளதாக திரு.நக்வி குறிப்பிட்டார்.   இந்தியர்களின் அரசியல் சாசன மற்றும் சமூகப் பொறுப்புணர்வு, குறிப்பாக பெரும்பான்மை சமுதாயத்தின் பொறுப்புணர்வு காரணமாக, சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார-கல்வி, மத மற்றும் பிற உரிமைகள், நாட்டில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளது. 

ஒருபுறம், ஏறத்தாழ உலகில் உள்ள அனைத்து மதங்களைப் பின்பற்றுவோரும் இந்தியாவில் வசிக்கும் நிலையில், மறுபுறம், ஏராளமான நாத்திகர்களும் இந்த நாட்டில் உரிய கண்ணியம் மற்றும் சம அளவிலான அரசியல் சாசன மற்றும் சமூக உரிமைகளுடன் வசிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

நாட்டில் சிறுபான்மையின மக்களின் நலன்களைப் பாதுகாப்பகதில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி பாராட்டுத் தெரிவித்தார்.  

******************


(Release ID: 1783093) Visitor Counter : 327


Read this release in: English , Urdu , Hindi