குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகைத்துறையின் விழுமியங்கள் மற்றும் தரங்கள் சிதைவதைத் தடுக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்

प्रविष्टि तिथि: 17 DEC 2021 7:15PM by PIB Chennai

பத்திரிகைத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் சுயபரிசோதனை செய்து, பத்திரிகைத்துறை விழுமியங்கள் மற்றும் தரங்கள் சிதைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார்.

சமூக ஊடகத் தளங்களில் பொய் செய்திகள், பாதி உண்மைகள் மற்றும் தவறான தகவல்கள் அதிகரித்து வரும் நிலையில், உண்மையான செய்திகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். தில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நான்கு பத்திரிகையாளர்களுக்கு வெவ்வேறு பிரிவுகளில் ‘கேரளியம்-வி கே மாதவன் குட்டி புரஸ்காரம்-2020’ விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் இந்தக் கருத்துகளை தெரிவித்தார்.

செய்திகள் ஒருசார்பானதாக இருக்கக்கூடாது என்று கூறிய அவர், “துரதிர்ஷ்டவசமாக, பல ஆண்டுகளாக பத்திரிகைத்துறையின் தரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு செய்தித்தாளைப் படிப்பதன் மூலமோ அல்லது ஒரு செய்தி சேனலைப் பார்ப்பதன் மூலமோ உண்மையான கோணத்தை பெறுவது கடினம்", என்று வருத்தம் தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஊடகங்கள் அதிக முனைப்புடன் ஈடுபட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். செய்திகளைப பரபரப்பானமுறையில் வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நற்செயல்கள் குறித்து மக்களுக்கு எடுத்துச்  செல்லவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782778

                                ****************

 

 

*

 

 


(रिलीज़ आईडी: 1782824) आगंतुक पटल : 253
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Punjabi