பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பிரதமரின் தாய்மார்கள் நல திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பயனடைந்தோர் விவரம்
Posted On:
17 DEC 2021 3:22PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இராணி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21) தரவுகளின்படி, நாட்டில் 15-49 வயதுக்குட்பட்ட 57.0 சதவீத பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் 53.4 % ஆகவும், புதுச்சேரியில் 55.1 %ஆகவும் உள்ளது.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடனான காணொலி கூட்டங்கள் மூலமாகவும், தேசிய மற்றும் பிராந்திய அளவிலான பயிலரங்குகள் மூலமாகவும் பிரதமரின் தாய்மார்கள் நல திட்டத்தின் (பிஎம்எம்விஒய்) வெற்றிகரமான செயலாக்கம் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
தமிழகத்தை பொருத்தவரை இத்திட்டத்தில் 2018-19-ல் 2,33,983 பயனாளிகள் இணைந்துள்ளனர், ரூ 4,178 லட்சம் வழங்கப்பட்டுள்ளது; 2019-20-ல் 4,21,108 பயனாளிகள் இணைந்துள்ளனர், ரூ 14,396 லட்சம் வழங்கப்பட்டுள்ளது; 2020-21-ல் 4,13,221 பயனாளிகள் இணைந்துள்ளனர், ரூ 12,388 லட்சம் வழங்கப்பட்டுள்ளது; 2021-22-ல் (2021 நவம்பர் 22 வரை) 2,06.040 பயனாளிகள் இணைந்துள்ளனர், ரூ 4,215.91 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782638
**************
(Release ID: 1782784)
Visitor Counter : 274