ரெயில்வே அமைச்சகம்

தொலை தூர ரயில்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் பாதுகாப்பை அளிக்கிறது இந்திய ரயில்வே: நாடாளுமன்றத்தில் தகவல்

Posted On: 17 DEC 2021 4:30PM by PIB Chennai

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

தொலை தூர ரயில்களில்  தனியாகவே அல்லது குழுவாகவோ பயணம் செய்யும் பெண்களுக்கு படுக்கை வசதி பெட்டிகளில் 6 இடங்கள், 3 ஏசி பெட்டிகளில் 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

ஒருங்கிணைந்த ஒதுக்கீடு பிரிவில் படுக்கை வசதி பெட்டிகளில் தலா 6 இடங்கள், 3 ஏசி பெட்டிகளில் தலா 4 முதல் 5 இடங்கள், 2 ஏசி பெட்டிகளில் தலா 3 முதல் 4 இடங்கள் மூத்த குடிமக்களுக்கும், 45 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட பெண் பயணிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

ரயில்வே பாதுகாப்புப்  படை போலீசார்(ஆர்பிஎப்), மாநில ரயில்வே போலீசாருடன் இணைந்து பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.

 

ரயில்  பயணத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க, 'எனது தோழி' திட்டம் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்கு 24 மண நேர ரயில்வே உதவி எண் 139 செயல்பாட்டில் உள்ளது.

 பெரு நகரங்களில் பெண்கள் சிறப்பு ரயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782695                                                                               

                                                                                **************

 

 



(Release ID: 1782768) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Bengali