சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் குறித்த அண்மைத் தகவல்
Posted On:
17 DEC 2021 2:20PM by PIB Chennai
2025-க்குள் காசநோயை முடிவுக்குக் கொண்டுவர தேசிய அளவிலான திட்டத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அமல்படுத்துகிறது. 2021-ம் ஆண்டின் உலகளாவிய காசநோய் குறித்த அறிக்கையின் படி இந்தியாவில் காசநோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2015-ல் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 217 பேர் என்றிருந்த எண்ணிக்கை 2020-ல் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 188 பேர் என்று ஆகியுள்ளது. (13% குறைவு) 2015-ல் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 36 பேர் என்பதில் இருந்து 2019-ல் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 33 பேர் என இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
கொவிட் பெருந்தொற்று காலத்தில் இடைவிடாமல் நோய் கண்டறிதலும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தன. உத்தேசமான காசநோயாளிகளின் எண்ணிக்கையை அடையாளம் காணவும், சிறப்பு மக்கள் தொடர்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 2020-ல் (ஜனவரி-டிசம்பர்) மொத்தம் 18.12 லட்சம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டனர். 2019-ல் கண்டறியப்பட்ட மொத்த நோயாளிகளின் (24 லட்சம்) எண்ணிக்கையை விட இது 25 சதவீதம் குறைவாகும். கொவிட்-19 ன் மிகப்பெரிய அலை இருந்த போதும் காசநோயாளிகளின் எண்ணிக்கை (2021, அக்டோபர் வரை) 17.6 லட்சம் என கண்டறிய முடிந்தது. இது 2020 – உடன் ஒப்பிடும் போது 18 சதவீதம் அதிகமாகும்.
மக்களவையில் இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782596
****
(Release ID: 1782764)