பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் தத்தெடுப்பு நடைமுறை: தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி விவரம்

Posted On: 17 DEC 2021 3:18PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இராணி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

இந்தியக் குழந்தைகளை தத்தெடுக்கும் விவகாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்பான அறிவிப்பை 04.03.2021 அன்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் திருத்தச் செயல்பாட்டின் போது, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரைகள்/கருத்துகளைப் பெற்றது. 09.08.2021 அன்று சட்டம் அறிவிக்கப்பட்டது.

வளர்ப்பு பெற்றோரிடமிருந்து 27 விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றும் அவற்றில் 10 வழக்குகளில் சரிபார்ப்பு கடிதங்கள் மாவட்ட நீதிபதிகளிடமிருந்து பெறப்பட்டன என்றும் மத்திய தத்தெடுப்பு ஆதார  ஆணையத்தால் தெரிவித்துள்ளது.

மிஷன் வாத்சல்யா எனப்படும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தின் கீழ் 2021 நவம்பர் நிலவரப்படி தமிழ்நாட்டிற்கு 2021-22-ம் ஆண்டில் ரூ 2457.23 லட்சமும், புதுச்சேரிக்கு ரூ 108.50 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782633

*****


(Release ID: 1782744)
Read this release in: English , Urdu , Bengali